சர்வதேச போட்டிகளில் நடுநிலை வீரர்களாக  பங்குபற்ற 6 ரஷ்யர்களுக்கு அனுமதி

06 Feb, 2023 | 04:46 PM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் நடுநிலை வீரர்களாக பங்குபற்றுவதற்கு 6 ரஷ்யர்களுக்கு உலக மெய்வல்லுநர் நிறுவனம் (World Athletics) அனுமதி வழங்கியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 6 மெய்வல்லுநர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த பின்னர் அவர்களுக்கு நடுநிலை வீரர்களாக பங்குபற்றுவதற்கு உலக மெய்வல்லுநர் நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் நடுநிலையாளர்களாக பங்குபற்றுவதற்கு விண்ணப்பித்த 6 ரஷ்ய மெய்வல்லுநர்களும் 3.2ஆம் இலக்க விதிக்கு அமைய சர்வதேச போட்டிககளில் நடுநிலை வீரர்களாக பங்குபற்றுவதற்கு தேவையான விதிவிலக்கு தகைமைகளுக்கான அளவுகோலை கொண்டிருப்பதை உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் (WADA) ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் ரஷ்ய மெய்வல்லுநர் சம்மேளனம் மீதான இடைக்காலத் தடை தொடரும் என உலக மெய்வல்லுநர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூக்ரெய்ன் மீது ரஷ்யா படையெடுத்ததன் விளைவாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சகலவிதமான உலக மெய்வல்லுநர் தொடர்களில் பங்குபற்றுவதற்கு ரஷ்யாவின் மெய்வல்லுநர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும்  தடை விதிக்க  உலக மெய்வல்லுநர் நிறுவனம்  தீர்மானித்தது.

இதற்கான தீர்மானம் உலக மெய்வல்லுநர் நிறுவனத்தினால் 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் திகதி எடுக்கப்பட்டது என்பதை உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியது.

ரஷ்ய மெய்வல்லுநர்களை தங்களது போட்டிகளில் இணைத்துக்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை வாண்டா டயமண்ட் லீக் எடுத்திருந்தது. மேலும், ரஷ்ய மெய்வல்லுநர்களை தங்களது போட்டிகளுக்கு கொன்டினென்டல் டுவர் ஏற்பாட்டாளர்கள்   அழைப்பதில்லை என்பதை ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் ஆய்வுக்குழு சபை புரிந்திருக்கிறது.

இதனைவிட நடுநிலை வீரர்களாக பங்குபற்றுவதற்கு 2022 பருவகாலத்தில் அனுமதிக்கப்பட்ட ரஷ்யர்கள், சபை தீர்மானம் எடுக்கும்வரை தொடர்ந்து பங்குபற்றலாம் என ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் ஆணைக்குழ தெரிவித்துள்ளது.

நிக்கிட்டா அனிஷ்சென்கோவ் (உயரம் பாய்தல்), ஆர்ட்டெம் சேர்மோஷன்ஸ்கி (நிளம் பாய்தல்), மஸ்கிம் பியான்ஸின் (வேகநடை), நிக்கிட்டா கேர்பனோவ் (உயரம் பாய்தல்), டெனல் செச்செலா (நீளம் பாய்தல்), மரினா கோவலீவா (நெடுந்தூர ஓட்டம்) ஆகியோரே நடுநிலை வீரர்களாக சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற விதிவிலக்கு  தகைமைகளுக்கான அளவுகோலை கொண்டிருக்கும் 6 ரஷ்யர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்