துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470 இற்கும் அதிகமானோர் பலி

Published By: Sethu

06 Feb, 2023 | 04:48 PM
image

துருக்கியில் இன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பத்தினால் துருக்கி மற்றும் சிரியாவில் 1,470 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கியின் காஸியன்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணியளவில் இப்பூகம்பம் ஏற்பட்டது. அவ்வேளையில் பெரும்பான மக்கள் உறக்கத்திலிருந்தனர்.

உயிர்தப்பிய பலர், அதிர்ச்சியுடன் வீடுகளிலிருந்து வெளியே ஓடி, பனிபடர்ந்த வீதிகளில் திரண்டிருந்தனர்.

சைப்பிரஸ் தீவு மற்றும் ஈராக்கிலும் இப்பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. 

இப்பூகம்பத்தினால் கு‍றைந்தபட்சம் 1,472 பேர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கியில்.... (AFP Photo)

துருக்கியில் இப்பூகம்பத்தினால் 912 பேர் உயிரிழந்துள்ளனர் என துருக்கிய ஜனாதிபதி தயீப் அர்துகான் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, சிரியாவில் இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் 560 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில்  326 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,089 பேர் காயமடைந்துள்ளனர்என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 221 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் காயமடைந்துள்ளனர் என அப்பகதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடும் வைட் ஹெல்மெட் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

துருக்கியின் மல்தாயா மாகாணத்தில் 13 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற பள்ளிவாசலொன்று பகுதியளவில் உடைந்துள்ளது. அங்கு 28 குடியிருப்புகளைக் கொண்ட 14 மாடி கட்டடமொன்றும் இடிந்து வீழ்ந்தது. 

சிரியாவில் ... (AFP Photo)

தியார்பாகிர் நகரில் இடிபாடுகளுக்குள்ளிருந்து குரல்கள் கேட்பதாகவும் சுமார் 200 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா ஆகியன துருக்கிக்கு அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், உதவிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளன.  துருக்கியின் பரம வைரியான கிறீஸும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கியும், துருக்கிக்கு அவசியமான உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10