புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் கைது

Published By: Digital Desk 3

06 Feb, 2023 | 02:21 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் நேற்று (பெப் 05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தம்பகல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கல்பொக்க வீதியின் எந்தகலஹின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து பெகோ இயந்திரம் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06