ஜெயிலர்' படத்தில் இணைந்த பொலிவூட் பிரபலம்

Published By: Ponmalar

06 Feb, 2023 | 01:48 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் பிரபல பொலிவுட் நடிகர் ஜேக்கி ஷெராப், நட்சத்திர பட்டியலில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் மூத்த மற்றும் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவ ராஜ்குமார் ஆகியோர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் வசந்த் ரவி, ஜான் கொக்கன், விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் 'பிகில்' படத்தில் வில்லனாக நடித்த பொலிவுட் நடிகர் ஜேக்கி ஷெராப் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிரத்யேகப் புகைப்படத்துடன் படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்டமான வசூலை குவித்த 'விக்ரம்' படத்தில் தெலுங்கு, மலையாளம் என பல திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தார்கள். படத்தின் அகில இந்திய வசூலுக்கு இதுவும் ஒரு காரணம் என திரையுலக வணிகர்கள் எடுத்துரைத்ததால், 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right