தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு

Published By: Ponmalar

06 Feb, 2023 | 01:28 PM
image

தெலுங்கின் முன்னணி இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'வாத்தி'. இதில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், தணிகல பரணி, சாய்குமார், இளவரசு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜே. யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக சித்தரிக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாகவம்சி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வெளியாகியிருக்கிறது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை தமிழில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகனான தனுஷ் பங்குபற்றவில்லை. நட்சத்திர நடிகர்கள் தங்கள் நடிக்கும் திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்குபற்றாதது திரையுலகில் ஆரோக்கியமான போக்கு அல்ல என மூத்த திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37