அதானி விவகாரம் | நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published By: Rajeeban

06 Feb, 2023 | 12:53 PM
image

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அதானி விவகாரம் தொடர்பாக மாவட்ட தலைநகரங்களில் உள்ள எல்ஐசி தலைமை அலுவலகம் / பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பாக இன்று (பிப். 6) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், ஜம்மு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் ஜி.பி. சாலையில் உள்ள எல்ஐசி பிராந்திய அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கொடியை கைகளில் ஏந்தியவாறு அவர்கள், கோஷங்களை எழுப்பினர். அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கோ அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கண்காணிப்பின் கீழோ விசாரணை நடத்தப்பட உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதேபோல், மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எல்ஐசி, எஸ்பிஐ ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு மத்திய அரசே காரணம் என குற்றம் சாட்டும் கார்டூன் படத்தை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதை வெளிக்கொண்டு வர விசாரணை அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் -...

2023-03-26 10:15:44
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற...

2023-03-25 15:56:27
news-image

ஜம்மு - காஷ்மீரில் நீர்மின் திறனை...

2023-03-25 15:09:49
news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17