(எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டை காட்டி கொடுப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை கிடையாது. புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையும் தொடந்தும் பாதுகாக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சிறிபோபுர பிரதேசத்தில் உதா கம்மான வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில்,

புதிய அரசியலமைப்பின் தயாரிப்பின் போது அனைத்து துறைக்கும் சுதந்திரம் வழங்கப்படும். ஒற்றையாட்சி எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பெளத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும். அதேபோன்று ஏனைய மதத்தவர்களுக்கும் உரிமை வழங்கப்படும். 

எனவே மக்களுக்கான அரசியலமைப்பினை நாம் உருவாக்கவுள்ளோம் என்றார்.