(எம்.வை.எம்.சியாம்)
புத்தளம், சிலாபம் பகுதியில் உள்ள தெதுறு ஓயா முகத்துவரம் பகுதிக்கு நீராடச் சென்ற தந்தை, மகள் மற்றும் உறவுமுறை சிறுவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (பெப் 05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பைச் சேர்ந்த குறித்த மூவரும் சிலாபத்தில் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் படகு ஒன்றின் மூலம் அவர்கள் உள்ளிட்ட 9 பேர் தெதுறு ஓயா முகத்துவரம் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர். குளித்து கொண்டிருந்த போது அவர்கள் அலையில் சிக்கி அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்போது 35 வயதுடைய தந்தை, அவருடைய 6 வயது மகள் மற்றும் 7 வயதுடைய உறவுமுறை சிறுவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.குறித்த மூவரும் தல்பொத்த, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM