துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 உயிரிழந்துள்ளதுடன், இப்பூகம்பத்தினால் அயல் நாடான சிரியாவில் குறைந்தபட்சம் 245 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன.
துருக்கி பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன.
துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கட்டடங்கள் உடைந்தன.
இப்பூகம்பத்தினால் துருக்கியில் குறைந்தபட்சம் 284 பேர் உயிரிழந்துள்ளனர் என உப ஜனாதிபதி புவாத் ஒக்டே தெரிவித்து;ளளார். மேலும் 2300 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக, சிரியாவின் அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாத்திரம் குறைந்தபட்சம் 237 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி சிரியாவில் குறைந்தபட்சம் 245 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM