(ஆர்.யசி )

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து தேசிய அரசாங்கத்தை கொண்டு நடத்திவந்தபோதிலும் தேசிய அரசாங்கத்தினுள்  பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும்  அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலேயே பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாகவும், நாட்டை தனியார் மயப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்துவரும் நிலையில் நாட்டை மீட்டெடுக்க தாம் போராடி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கதின் மூன்றாவது ஆண்டு காலம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை பலப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்படுமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.