உக்ரேன் ஜனாதிபதியை ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னிடம் உறுதியளித்தார் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் நவ்டாலி பெனெட் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா உக்ரேன் மீதான தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த சில நாட்களின் பின்னர் ரஸ்யாவிற்கான தனது விஜயத்தின் போது புட்டின் இந்த உறுதிமொழியை வழங்கினார் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் ஆரம்பநாட்களில் சமாதான முயற்சிகளிற்காக நான் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை ஜெலென்ஸ்கியின் உயிருக்கு ஆபத்தில்லை என புட்டின் உறுதியளித்தார் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கியை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா என நான் புட்டினிடம் கேட்டேன் அதற்கு அவர் நான் ஜெலென்ஸ்கியை கொலை செய்யமாட்டேன் என தெரிவித்தார் என நவ்டாலி பெனெட் தெரிவித்துள்ளார்.
நான் அதற்கு நீங்கள் ஜெலென்ஸ்கியை கொலை செய்யமாட்டேன் என்ற வாக்குறுதியை தருகின்றீர்கள் என கருதுகிறேன் என தெரிவித்தேன் அதற்கு புட்டின் ஆம் நான் அவரை கொல்ல மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் நான் மொஸ்கோ விமானநிலையத்திற்கு செல்லும் வழியில் உக்ரைன் ஜனாதிபதியை தொடர்புகொண்டு இதனை தெரிவித்தேன் அதற்கு அவர் நீங்கள் உறுதியாக சொல்கின்றீர்களா என கேட்டார் நான் ஆம் புட்டின் 100 வீதம் உறுதியாக தெரிவித்தார் என குறிப்பிட்டேன் எனவும் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM