பேரணியில் கலந்து கொள்வோருக்கு வடக்கில் இருந்து பஸ் வசதி

Published By: Digital Desk 3

06 Feb, 2023 | 10:30 AM
image

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொள்பவர்களுக்குரிய பஸ் ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

 “இலங்கையின் சுதந்திர நாள் - தமிழர்களுக்குக் கரிநாள்”  என்ற தொனிப் பொருளில், தமிழர்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகியவற்றைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெறும் எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. 

அந்த எழுச்சி நிகழ்வுக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொள்பவர்களுக்குரிய பஸ் ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இன்று திங்கட்கிழமை,  மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்தும், கிளிநொச்சி - பரந்தன் பஸ்  நிலையம் மற்றும் கிளிநொச்சி - புதிய பஸ்  நிலையத்திலிருந்தும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் பஸ் நிலையங்களிலிருந்தும் பஸ்கள்  செல்லவுள்ளன.

அந்தந்த மாவட்டங்களில் இருந்து செல்லவுள்ளோர் அருகிலுள்ள பஸ்  புறப்படும் இடங்களுக்குக் குறித்த நேரத்துக்குச் சென்று பஸ்ஸில் தங்களது பயணத்தை தொடர முடியும்.

 மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 0774819490 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி,...

2024-09-09 09:58:01
news-image

களுத்துறை சிறைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற...

2024-09-09 09:48:51
news-image

தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்...

2024-09-09 09:43:10
news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 06:34:37
news-image

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம்...

2024-09-09 01:50:34
news-image

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக...

2024-09-08 23:00:58
news-image

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட...

2024-09-08 21:09:55
news-image

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும்...

2024-09-08 21:08:02
news-image

உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரஸ்;...

2024-09-08 20:57:49
news-image

தலிபான்களைப்போன்ற ஆட்சியை முன்னெடுக்கவே அனுரகுமார முயற்சிக்கிறார்...

2024-09-08 20:17:46
news-image

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு...

2024-09-08 19:35:18
news-image

தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை...

2024-09-08 19:15:41