தளபதி விஜய் கர்ஜிக்கும் 'லியோ'

Published By: Nanthini

05 Feb, 2023 | 05:46 PM
image

'வாரிசு' படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகும் புதிய படத்துக்கு 'லியோ' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனுடன் டைட்டில் லுக்கிற்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 

மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர பட்டியலில் இணைந்த இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'லியோ'. இதில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். 

இவர்களுடன் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

மனோஜ் பரஹம்ஸா ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். 

மாஸ் எக்ஷன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித்குமார் தயாரிக்கிறார். 

இந்தப் படத்துக்கு ஜெகதீஷ் பழனிச்சாமி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

ஜனவரி 2ஆம் திகதி முதல் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தற்போது ஸ்ரீ நகரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் தளபதி விஜயின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 'தளபதி 67' என பெயரிடப்பட்டிருந்த இந்த திரைப்படத்துக்கு 'லியோ' என தலைப்பிட்டு, தங்க காசு வடிவில் பிரத்யேக போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

தங்க நிறத்தில் ஆங்கில எழுத்துக்களில் ஜொலிக்கும் 'லியோ' எனும் டைட்டில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

மேலும், இதில் இரண்டு புறங்களும் கத்தி போன்ற ஆயுதமும், ஓரிடத்தில் தங்கத்தாலான தாள் பிரிக்கப்பட்டு, உள்ளே சொக்லேட் இருப்பது போலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் 'தித்திக்கும் குருதி' எனும் பொருளைக் குறிக்கும் வகையில் 'பிளடி ஸ்வீட்' என்ற டேக்லேனும் இணைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

ரசிகர்களை வசீகரிக்க டைட்டில் லுக்கிற்கான பிரத்தியேக காணொளி ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில் தொழிற்சாலை ஒன்றில் சொக்லேட் தயாரிக்கப்படும் பாணியும், அதனூடாக வலிமையான கத்தி எனும் ஆயுதம் தயாரிக்கப்படும் விதமும், விஜயின் அர்த்தமுள்ள ஆக்ரோஷமான பார்வையும் இடம்பெற்றிருக்கிறது. 

இது திரைப்படத்தில் இடம்பெறுமா, இல்லையா என்பதை விட, 'லியோ' எம்மாதிரியான திரைப்படம் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

இதனிடையே விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டில் பொங்கலுக்கு 'ஜில்லா' என்ற திரைப்படமும், ஆயுத பூஜை விடுமுறையில் 'கத்தி' என்ற திரைப்படமும் வெளியானது என்பதும், அதன் பிறகு இந்த ஆண்டு பொங்கலுக்கு 'வாரிசு' என்ற திரைப்படமும், ஆயுத பூஜையை முன்னிட்டு ஒக்டோபர் 19ஆம் திகதியன்று 'லியோ' திரைப்படம் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெய் நடிக்கும் 'லேபிள்' எனும் இணையத்...

2023-03-25 13:30:04
news-image

‘பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்டம்...

2023-03-25 13:22:11
news-image

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் மனோஜ் பாரதிராஜா

2023-03-25 13:01:41
news-image

'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் இசை வெளியீடு

2023-03-25 12:48:16
news-image

'வசீகரா...' பாடல் புகழ் பாடகி பாம்பே...

2023-03-24 17:00:01
news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05
news-image

குழந்தைகளுக்கு தொடுதல் பற்றி பெற்றோர்கள் தொடர்ந்து...

2023-03-23 16:51:38