நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

Published By: Nanthini

05 Feb, 2023 | 05:44 PM
image

'சீதா ராமம்' எனும் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகிவரும் புதிய திரைப்படமான 'கிங் ஆப் கோதா' எனும் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

மலையாள இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. இதில் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இவர்களுடன் சபீர், கோகுல் சுரேஷ், செம்பொன் வினோத் ஜோஸ், பிரசன்னா, சாந்தி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். 

கேங்ஸ்டர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து வேஃபேரர் பிலிம்ஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் துல்கர் சல்மான், வித்தியாசமான சிகை அலங்காரம் மற்றும் உடல் மொழியுடன் தோன்றுகிறார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஓணம் பண்டிகை வெளியீடாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் மலையாள மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'வசீகரா...' பாடல் புகழ் பாடகி பாம்பே...

2023-03-24 17:00:01
news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05
news-image

குழந்தைகளுக்கு தொடுதல் பற்றி பெற்றோர்கள் தொடர்ந்து...

2023-03-23 16:51:38
news-image

ஜோதிகா நடிக்கும் 'காதல் - தி...

2023-03-23 12:27:21
news-image

பிரம்மாண்டமான பான் இந்திய படங்களை தயாரிக்கும்...

2023-03-23 11:33:28
news-image

'கே.டி. தி டெவில்' படத்தில் இணையும்...

2023-03-23 11:14:03
news-image

'பொன்னியின் செல்வன் - 2'இல் நடிக்கும்...

2023-03-23 10:36:46