'வாரிசு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் நடிகர் ஷாம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்குகிறார்.
'கோலி சோடா' எனும் படத்தின் மூலம் அனைவரது பார்வையும் தன் மீது திருப்பியவர் ஒளிப்பதிவாளரான இயக்குநர் விஜய் மில்டன்.
ஒளிப்பதிவாளராக பணியாற்றினாலும், தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் தயாராகும் திரைப்படங்களை இயக்கியும் வருகிறார்.
அண்மையில் விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் திரைப்படத்தை இயக்கிய விஜய் மில்டன், தற்போது புதிதாக பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதில் கதையின் நாயகனாக நடிகர் ஷாம் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.
கதைக்கும் கதைக்களத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து படைப்புகளை உருவாக்கி வரும் விஜய் மில்டன், நேர்த்தியான நடிப்பை வழங்கி வரும் நடிகர் ஷாம் என இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைத்திருப்பதால், இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM