ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு : தேடிவந்தவர்களிடம் மகன் பிடிபடாத நிலையில் தாய் கடத்தப்பட்டு கொலை

Published By: Nanthini

05 Feb, 2023 | 05:40 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கனை தேடி காரில் வந்த மூவர், அவர்  இல்லாத நிலையில் தாயை கடத்திச் சென்றுள்ளனர். அதனையடுத்து நேற்று (4) எம்பிலிப்பிட்டிய பகுதியில் குறித்த தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக குறித்த பெண்ணின் மகன் சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலை வீதியில் வைத்து பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் கூறுகையில்,

சூரியவெவ, வீரியகம பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மகன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். 

அவர் அந்தப்  பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில் புரிந்தபோது அதன் உரிமையாளர் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி, பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹோட்டலின் உரிமையாளரும், மேலும் இருவரும் காரில் வந்து மகனை தேடியுள்ளனர்.

எனினும், மகன் அங்கே இல்லாததால் அவரின் தாயான குறித்த பெண்ணை காரில் கடத்திச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29
news-image

வாய்மூல விடைக்கான கேள்விகளை காணி வழக்கு...

2023-03-23 12:23:34
news-image

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்குமாறு...

2023-03-23 11:33:42
news-image

மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்ட புரு மூனா!  

2023-03-23 11:28:34