(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைச்சேரியிடம் 770 மில்லியன் ரூபாவை கோரியுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு மொத்தமாக 10 பில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளது.
339 உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தபால் மூல வாக்கெடுப்பு 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு திறைசேரி 37 மில்லியன் ரூபாவை ஏற்கெனவே ஒதுக்கியுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆணைக்குழு 770 மில்லியன் ரூபாவை திறைச்சேரியிடம் கோரியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளது.
தேர்தல் செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு நிதி ஒதுக்குவது சிக்கலானது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
அரச செலவுகளுக்கு தேவையான ஒரு மாத நிதியை திரட்டிக்கொள்வது கடினமாக உள்ள நிலையில் தேர்தலுக்காக பாரிய நிதியை ஒதுக்கினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் என அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM