கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில் கைது

Published By: Nanthini

05 Feb, 2023 | 05:34 PM
image

யானை கஜமுத்துக்களை இரகசியமாக விற்பனை செய்ய முயன்ற இளைஞனை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை, கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (3) இரவு சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நடமாடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞனை கைதுசெய்தனர்.

இதன்போது கைதான சந்தேக நபரிடமிருந்து யானை தந்தத்துக்குள் இருக்கின்ற கஜமுத்துக்கள் நான்கினை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கஜமுத்துக்களை வைத்திருந்த காரணத்தினால்  கைதுசெய்யப்பட்ட இவ்வி‍ளைஞன் திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்ட நபர் உள்ளடங்கலாக சான்று பொருட்கள் யாவும் சம்மாந்துறை பகுதியிலுள்ள ஜீவராசிகள் திணைக்கள பிரிவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்....! வைத்தியர்...

2023-03-23 16:52:20
news-image

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...

2023-03-23 17:24:22
news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51