விஜய் சேதுபதி நடிக்கும் 'ஃபார்ஸி' வலைத்தள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு

Published By: Nanthini

05 Feb, 2023 | 05:19 PM
image

மேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் 'ஃபார்ஸி' எனும் புதிய வலைத்தள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை அந்த தொடரின் நாயகர்களில் ஒருவரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்டார்.

'சுழல் - தி வோர்டெக்ஸ்', 'வதந்தி - தி ஃபேபுள் ஒஃப் வெலோனி' ஆகிய அசல் தொடர்களை அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்திவரும் அமேசான் ப்ரைம் வீடியோ, அடுத்ததாக விஜய் சேதுபதி,- பொலிவுட் நட்சத்திர நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடிக்கும் 'ஃபார்ஸி' எனும் வலைத்தள தொடரை தயாரித்து வழங்குகிறது. 

பெப்ரவரி 10ஆம் திகதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவிருக்கும் 'ஃபார்ஸி' தொடரில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோருடன் ராஷி கண்ணா, ரெஜினா கஸண்ட்ரா, கே.கே. மேனன், அமோல் பலேகர், ஜாகிர் ஹுசைன், புவன் அரோரா, குப்ரா சையத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

க்ரைம், த்ரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த வலைத்தள தொடருக்கு இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கேஉடன் இணைந்து சுமன் குமார் மற்றும் சீதா ஆர். மேனன் ஆகியோர் இணைந்து கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள். 

இந்த வலைத்தள தொடரை டி2 ஆர் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர்களான ராஜ் மற்றும் டி.கே தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் தொடருக்கான முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்துக்கான புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் வேலன் திறந்தவெளி அரங்கத்தில் புதிர் கட்ட பாணியிலான போஸ்டரை வெளியிடும் நிகழ்வில் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் ஒன்றிணைத்தனர். 

இதனை விஜய் சேதுபதி வருகை தந்து பார்வையிட்டு, மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

இதன்போது விஜய் சேதுபதி பேசுகையில், 

''நான் முதன்முதலாக ஹிந்தியில் பேசி நடித்திருக்கும் வலைத்தள தொடர் 'ஃபார்ஸி'. 

பெப்ரவரி 10ஆம் திகதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. எம்முடன் பொலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் நடித்திருக்கிறார். இதனை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்