தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு அச்சம் - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Vishnu

05 Feb, 2023 | 05:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனை அரசாங்கத்திற்கு கிடையாது.

தேர்தலுக்கு அஞ்சவில்லை, தேர்தல் செலவுகளுக்கு அச்சமடைகிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு 

கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில், 

அரச செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் சகல அரச நிறுவனங்களுக்கும் விசேட சுற்று நிரூபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சுக்களின் செலவுகளை குறைப்பதற்கும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தற்போது வெற்றியடையடைந்துள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. சிறந்த முகாமைத்துவத்தினால்  எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை யுகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு அனைத்து தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சிவில் பிரஜை ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் நிதியமைச்சின் செயலாளர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஒரு பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

தேர்தலை அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது, இருப்பினும் தேர்தல் செலவுகளை கண்டு அச்சமடைகிறோம்.

நாணயம் அச்சிடுவதற்கு மட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறன பின்னணியில் தேர்தலுக்காக நிதி அச்சிட்டால் பணவீக்கம மீண்டும் உயர்வடைந்து பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் கடமைக்கு இடையூறாகவும் கனிய மணல்...

2024-11-07 00:02:29
news-image

வரவு - செலவு திட்டம் தாமதமாகும்...

2024-11-06 17:12:33
news-image

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை வேறு ஒருவருக்கு...

2024-11-06 21:18:39
news-image

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருக்கிடையில்...

2024-11-06 20:14:55
news-image

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் மாற்றுக்கருத்துக்களை...

2024-11-06 16:21:54
news-image

அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்துத்...

2024-11-06 19:46:33
news-image

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கணிய மண்...

2024-11-06 19:30:48
news-image

ஊடக அடக்குமுறையை பிரயோகிப்பது எமது நோக்கமல்ல...

2024-11-06 16:27:48
news-image

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-06 17:50:04
news-image

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

2024-11-06 17:24:58
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் செயலாளருடன்...

2024-11-06 17:33:20
news-image

அரசியல் தீர்வைநோக்கிய பயணத்துடன் அபிவிருத்தியே எனது...

2024-11-06 17:25:41