தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் இன்று (5) தனது 68ஆவது வயதில் காலமானார்.
வயது மூப்பு காரணமாக அவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவையாளராகவும் வலம் வந்த கஜேந்திரன் இயக்குநராகவும் அறியப்பட்டிருந்தார்.
1985ஆம் ஆண்டு முதல் நடித்து வந்தபோதும் பலரால் அறியப்படாத கலைஞராகவே இவர் இருந்தார்.
1988ஆம் ஆண்டு இவரை இயக்குநராக அடையாளம் காட்டியது 'வீடு மனைவி மக்கள்' என்ற திரைப்படமாகும். இந்த படத்தை கன்னடத்திலும் கஜேந்திரனே இயக்கினார்.
கே.பாலச்சந்தர், விசு போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்,
பாண்டி நாட்டு தங்கம், பாசமுள்ள பாண்டியரே, மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன், எங்க ஊரு காவல்காரன், சீனா தானா முதலிய 10க்கு மேற்பட்ட திரைப்படங்களை பின்னாட்களில் இயக்கினார்.
எனினும், இயக்குநராக அல்லாமல் ஒரு நகைச்சுவை நடிகராகவே பலரால் அறியப்பட்ட இவருக்கு குள்ளமான உருவமும் தொந்தி வயிறுமே அடையாளமாகிப் போனது.
தமிழ் திரைத்துறையில் தனக்கு வாய்ப்பளித்த பாலச்சந்தர், பாரதிராஜா, விசு ஆகிய இயக்குநர்கள் மீது கொண்ட அன்பாலும் மரியாதையாலும் தான் நடத்தி வரும் லொட்ஜின் மூன்று தளங்களுக்கும் இந்த மூன்று இயக்குநர்களின் பெயர்களை சூட்டியதாக ஒரு பேட்டியில் அவரே மனம் திறந்து கூறினார்.
பெருந்தன்மையும் எளிமையும் கொண்ட டி.பி.கஜேந்திரனின் மறைவு திரைத்துறை நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைந்த மறுநாளே கஜேந்திரனும் இறந்துள்ளார். இதனால் அடுத்தடுத்து துயர சம்பவங்கள் நிகழ்வது குறித்து திரைத்துறையினர் வருந்துவதோடு, இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM