இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில் கிடைக்கும் தகவலுக்கு அமைய நீதிமன்றத்தை நாடுவோம் - பெப்ரல்

Published By: Vishnu

05 Feb, 2023 | 12:55 PM
image

(எம்.ஆர்.எம். வசீம்)

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தொடர்பான நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என தகவல் அறியும் ஆணைக்குழு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிறுத்தி உள்ளது.

அதன் பிரகாரம் கிடைக்கும் பதிலுக்கமை நீதிமன்ற உதியை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

இரட்டை பிரஜா உரிமை உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்குவுக்கு  பெப்ரல் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை பிரஜா உரிமை உள்ள உரிப்பினர்கள் தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அதுதொடர்பாக வழங்குமாக இருந்தால் அது தொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவோம் இதுதொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு  சமர்ப்பித்திருந்த மேன்முறையீடு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவது சம்பந்தமாக  தங்களின் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என ஆணைக்குழுவினால் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன் பிரகாரம் குறித்த அதிகாரிகளால் வழங்கப்படும் பதிலுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் நாட்டில் இருப்பது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் நாட்டில் தீர்மானம் எடுக்கும் இடங்களில் பதவி வகிப்பது பொருத்தமில்லை. 

அது எமது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பாகவும் அமையும். குறிப்பாக நாட்டில் சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தில் இவர்கள் இருந்த, சட்ட மூலம் அனுமதிக்கப்படும்போது, அவர்கள் நாட்டுக்கு பூரண நம்பிக்கையும் செயற்படுமா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46