புசல்லாவையில் தீ விபத்து : 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி தீக்கரை ! (படங்கள் இணைப்பு)

Published By: Robert

25 Dec, 2016 | 04:02 PM
image

கலஹா பொலிஸ் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு டெல்டா வடக்கு (டேசன் தோட்டம்) 7ம் நம்பர் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இன்று காலை 11 மணியளவில் இந்த தீ வீடொன்றில் இருந்து பரவியுள்ளது. 

தீக்கான காரணம் மின்சார கசிவாக இருக்கலாம் என சந்தேகபடும் அதே வேலையில் ஊர் மக்களின் உதவியால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. 

இருந்தும் குறிப்பிட்ட சில வீடுகளில் சில பொருட்கள் பொது மக்களின் உதவியால் காப்பாற்றப்பட்ட போதும் பெரும் அளவிலான பொருட்களும் வீட்டு தொகுதியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

ஸ்தலத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்னினைப்புக்களை துண்டித்துள்ளனர். தோட்ட நிர்வாகம், ஊர் மக்கள் பாதிக்கப்பட்ட சிறியோர் உட்பட  பெரியோர் அடங்களான 28 பேரை தோட்டத்தின் சனசமுக நிலையத்தில் தற்காலிகமாக குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

இவர்களுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இ.தொ. கா. உப தலைவர்களின் ஒருவரான எம்.எஸ்.எஸ் செல்லமுத்து, தொழிலாளர் தேசிய சங்க அமைப்பாளர் கே.சன்முகராஜ், மலையக மக்கள் முன்னனி அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், ஊர் மக்கள், கலஹா பொலிஸாரும் இணைந்து இவ் நிவாரண வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொலுவ பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கும் தற்காலிக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான மக்களின் குடியிருப்புகளை உடனடியாக அமைத்து கொடுப்பதற்கு மலைநாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்  நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக விசாரனைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34