நாட்டின் சில பிரதேசங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் 

Published By: Nanthini

05 Feb, 2023 | 10:31 AM
image

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றைய தினம் பல முறை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யலாம் என கூறப்படுகிறது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

இதேவேளை நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். 

அத்துடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அந்த கடல் பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் அலைகளின் தன்மை இயல்பாக காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46