சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை என்பதை தெரியப்படுத்தவே நான் இங்கு வந்தேன் - பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இலங்கையர்களுக்கு தெரிவிப்பு

Published By: Digital Desk 5

04 Feb, 2023 | 06:34 PM
image

(நா.தனுஜா)

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார். 

அரசாங்கத்தின் அழைப்பையேற்று சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்ட், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றின் அழுத்தங்களால் இலங்கை மாத்திரமன்றி மேலும் பல நாடுகள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே 56 உறுப்புநாடுகளைக்கொண்ட பொதுநலவாய அமைப்பானது, நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் உறுப்புநாடுகளின் மீட்சிக்கு அவசியமான ஆதரவை வழங்கும் நோக்கில் ஒன்றிணைந்து செயலாற்றிவருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களினால் ஏற்பட்ட சுமையை இலங்கை தொடர்ந்து உணர்கின்றது (சுமக்கின்றது) என்பதை நான் அறிவேன்.

சுமையைத் தாங்குவதென்பது மிகவும் கடினமானதாகவும், அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள பற்றீஸியா ஸ்கொட்லன்ட், இருப்பினும் 'இந்த சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை' என்பதை அனைத்து இலங்கையர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காகவே நான் இங்கு வந்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட...

2026-04-11 14:08:23
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27