வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான கண்டி நிகழ்வு குறித்த சர்ச்சைகளுக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு பதில்

Published By: Nanthini

04 Feb, 2023 | 02:39 PM
image

(நா.தனுஜா)

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு கண்டியில் வழங்கப்பட்ட பாதுகாப்பின்போது வியன்னா பிரகடனம் மற்றும் ஏனைய சர்வதேச நியமங்கள் என்பன உரியவாறு பின்பற்றப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு, இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள விமர்சனங்களை முழுமையாக நிராகரித்துள்ளது. 

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (2) கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான கோட்டி ஐவரியின் சிறப்புத் தூதுவர் என்ட்ரை எரிக் காமில், இலங்கைக்கான ஜமைக்காவின் உயர்ஸ்தானிகர் ஜேசன் கே.ஹோல், இலங்கைக்கான உருகுவே ஓரியண்டல் குடியரசின் சிறப்புத் தூதுவர் அல்பர்டோ குவானியோ அமரில்லா, இலங்கைக்கான வட மெசிடோனியாவின் தூதுவர் ஸ்லோபோடன் உசுனொவ், இலங்கைக்கான ஸ்லோவாக்கிய தூதுவர் ரொபர்ட் மக்சியான், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் ஆகியோர் உள்ளடங்கலாக 11 இராஜதந்திரிகள் தமது நற்சான்றுப் பத்திரங்களை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்தனர்.

இந்நிகழ்வு நடைபெற்ற தினத்தில் கண்டியில் அதியுயர் பாதுகாப்புடன் பெரும் எண்ணிக்கையான அரச வாகனங்கள் பயணிக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தன. 

குறிப்பாக, நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய அநாவசிய செலவினங்கள் அவசியமா என பலர் கேள்வி எழுப்பியிருந்ததுடன், அண்மையில் அரசினால் புதிதாக அறவிடப்பட்டுள்ள பெருந்தொகையான வரி இவ்வாறுதான் செலவிடப்படுகிறது என்றும் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்நிகழ்வு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தவறாக வழிநடத்தக்கூடியவையாக அமைந்திருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி கண்டியில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது வியன்னா பிரகடனம் மற்றும் ஏனைய சர்வதேச நியமங்கள் என்பன உரியவாறு பின்பற்றப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56