(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டன
நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனரா? ஊழல் மோசடிக்காரர்கள் சுதந்திரமாக நாட்டில் சுற்றித் திரிகின்றனர் என பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் இதில் பங்கேற்றவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
கொழும்பில் ஆர்ப்பாட்டம்
கொழும்பு, எல்பின்ஸ்ட் அரங்குக்கு முன்னாள் நேற்று (03) இரவு ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
நாட்டின் சுதந்திர தினத்தன்று தனிமனித கருத்துக்களை வெளியிட முடியாத நாட்டில் என்ன சுதந்திரம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அவ்விடத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கோரியபோதிலும், அவர்கள் அவ்விடத்திலிருந்து செல்லாததால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
பெளத்த மதகுருமார்கள் எதிர்ப்பு
இதேவேளை, பாராளுமன்றத்திற்கு நுழையும் பத்தரமுல்லை தியத்த உயனவுக்கு அருகே பெளத்த மத குருமார்கள் பலர் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இதன்போது சிவில் சமூகத்தினர் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
கத்தோலிக்க மதகுருமார் அமைதி போராட்டம்
கொழும்பு 10 , மருதானையிலுள்ள சீ.எஸ். ஆர். நடுநிலைய கத்தோலிக்க அருட் தந்தையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைதி வழி போராட்டத்தில் கத்தோலிக்க அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் பலரும் பங்கேற்று அரசாங்கத்திற்கு எதிரான பதாதைககளை ஏந்தியிருந்தனர்.
கல்லடியிலும் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கல்லடியிலும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
ஆயிரக்காணக்கானோர் பங்கேற்றிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள், தலையில் வெள்ளைநிற தொப்பியும் அணிந்து அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் , பாதாகைகளை தாங்கி வண்ணமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM