குத்தாட்ட நடிகையான ரித்திகா சிங்

Published By: Digital Desk 5

04 Feb, 2023 | 01:31 PM
image

'இறுதி சுற்று' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பொலிவுட் நடிகை ரித்திகா சிங், விரைவில் வெளியாகவிருக்கும் மலையாள படமொன்றில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடி, குத்தாட்ட நடிகையாகவும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், நடிகர் மாதவன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் தயாரான 'இறுதி சுற்று' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த பாரிய வரவேற்பிற்கு பிறகு அவர் 'ஆண்டவன் கட்டளை', 'சிவலிங்கா', 'ஓ மை கடவுளே' ஆகிய படங்களில் நடித்து, முன்னணி நட்சத்திர நடிகையாக முன்னேறினார். ‌தற்போது இவர் 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் அருண் விஜய் நடித்த 'பாக்ஸர்', விஜய் அண்டனி நடித்த 'கொலை' ஆகிய திரைப்படங்கள் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கிறது.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு எந்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் நடிகை ரித்திகா சிங், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் 'கிங் ஆஃப் கோதா' எனும் கேங்ஸ்டர் படத்தில் இடம்பெறும் ஒரேயொரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியிருக்கிறார்.

இதனால் கதாநாயகியாகவும், கதையின் நாயகியாகவும் நடித்து தன் திறமையை வெளிப்படுத்திய ரித்திகா சிங், தற்போது குத்தாட்ட நடிகையாகவும் மாற்றம் பெற்றிருக்கிறார். அவரது இந்த மாற்றத்தை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்