Daraz ஊடாக கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்

Published By: Nanthini

04 Feb, 2023 | 10:41 AM
image

சுதந்திரம் என்பது நம் அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், சமூகத்தைப் பார்க்கும்போது, நம்மிடம் இருப்பது சுதந்திரம் என்று நினைக்கிறோம். இன்று மக்கள் எதிர்கொள்ளும் பலமான பிரச்சினைகளில் ஒன்றாக பொருளாதார சுதந்திரத்தை அறிமுகப்படுத்தலாம். 

பல்வேறு பொருளாதார சிக்கல்களுடன், வேலையின் பளுவும் பலரின் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனாலேயே இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திரம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் பலரது வணிகக் கனவுகளை நனவாக்கி, உண்மையான சுதந்திரத்துடன் பொருளாதார சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுத்து வெற்றி பெற்றுள்ள Daraz நிறுவனம் பற்றிய தகவல்களை கொண்டுவர நினைத்தோம். 

இந்த நாட்டில் இலங்கையின் முன்னணி இலத்திரனியில் வர்த்தக தளமாக அறிமுகம் செய்யக்கூடிய Daraz, அதனுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை சுதந்திரமாகவும் நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. Daraz ஒரு இலத்திரனியல் வணிகத்தளம் மட்டுமல்ல, வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்கும் தளமாகவும் அறிமுகப்படுத்தக்கூடியதாக உள்ளது. 

Daraz மூலம் கட்டியெழுப்பப்பட்டு Daraz மூலம் ஆரம்பிக்கப்பட்ட உள்ளூர் வணிகங்கள் பல.

இலங்கையில் ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர். Upaylow நிறுவுனர் திரு. இன்ஷாஃப் அவுஃபர் அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபர். 

தங்கள் தொழிலை தொடங்குவதற்கு முன், திரு. அவுஃபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். அவர்களது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, திரு. அவுஃபரின் மனைவி ஒன்லைனில் Upaylowவை தொடங்கும் அணியில் சேர்ந்தார்.

மேலும், அதை ஆதரிக்கும் திரு. அவுஃபர், அதன் வெற்றி மற்றும் இலாபம் காரணமாக தனது வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக வணிகத்தில் சேர்ந்தார். 

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

"ஆரம்பத்தில் நாங்கள் சுமார் 45 தயாரிப்புகளை விற்பனை செய்தோம். ஆனால், இன்று சமையலறைக்கு தேவையான அனைத்து மின்னணு பொருட்கள், வாசனை திரவியங்கள், நுகர்வோர் பொருட்கள் உட்பட 3,000க்கு அதிகமான பரந்தளவிலான தயாரிப்புகளை நாங்கள் விற்பனை செய்கிறோம். 

வணிகத்தை தற்போதைய நிலைக்கு கொண்டு வருவதற்கு Daraz நிறுவனம் தனது வழிகாட்டல்கள் மற்றும் ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

ஊழியர்களாக சீரான ஒரு வருமானத்துக்கு மட்டும் பழக்கப்பட்டிருந்த நாம் இப்போது மிக சுதந்திரமாக தொழில் நடத்துகிறோம். நமக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ள நேரமிருக்கிறது.

இப்போது ஒரு வருமானத்தில் தங்கியிருக்கவில்லை. அதுபோலவே எங்கள் வியாபாரத்தை பற்றி பலரும் அறிந்துள்ளனர். இவை அனைத்தும் Daraz வழங்கிய ஆதரவின் மூலமாகவே என்று கூறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

Indi Fashionஐ நடத்தும் திருமதி. டிலானி உபெக்ஷாவும் Daraz மூலம் உருவான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். 

உள்ளூர் பெண்கள் ஆடை வியாபாரக்குறியான 'Indi'யின் கீழ் பெண்களுக்கான லினன் உள்ளாடைகளை உற்பத்தி செய்யும் திருமதி. டிலானி, சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு Darazஉடன் இணைந்தார்.

இந்நிறுவனத்துடனான தனது அனுபவத்தை அவர் பகிர்ந்துகொள்கையில், 

"நான் முதலில் இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை முகவர் நிலையங்கள் மூலம் எனது ஆடைகளை விற்றேன். வியாபாரத்தில் ஒரு புதிய படியாக நான் Darazஇல் இணைந்தேன். 

Darazஇடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. மேலும், நான் வணிகத்துறை மற்றும் ஒன்லைன் வணிகம் பற்றி நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சிப் பட்டறைகள், நிகழ்வுகள் மூலம் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டதுடன் என்னால் புரிந்துகொள்ளவும் முடிந்தது. 

இன்று எனது பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். எனக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஓடர்கள் கிடைக்கிறது. இன்று எனது வருமானமும் நன்றாக உள்ளது. 

Daraz நிறுவனத்தில் நான் காணும் விசேட அம்சம், ஆரம்பத்திலிருந்தே சலுகைகள், தரம் மற்றும் திறமையான சேவை என்பவற்றை பெற்றுக்கொடுத்தல் ஆகும். 

மேலும், Daraz நிறுவனம் எங்கள் பலம் என்பதால் எந்த பயமும் இல்லை. உண்மையில், Daraz நிறுவனம் காரணமாக நான் சுதந்திரமாக இருக்கிறேன்" என தெரிவித்தார். 

Aura Online Storeஐ நடத்தும் திருமதி. வைஷ்ணவி ஹரிஷன் Darazஉடன் இணைந்தது பற்றி தெரிவிக்கையில்,

"தொழில் தொடங்கும் முன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அதன் பிறகு Darazஇல் சேர்ந்தேன்.

உண்மையில் தற்போது எனது தொழில் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. 

அன்றாட வேலைகளை செய்துகொண்டே தொழிலை நடத்தும் சுதந்திரம் எனக்கு உள்ளது. அது மிகப்பெரிய நிம்மதி. 

ஒரு பெண்ணான எனக்காக, எனது கணவரின் தந்தையும் எனது வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறார். அவர் ஓய்வுபெற்ற ஒருவர். அவர் எனது தொழிலுடன் தொடர்புபட்டிருப்பதால் அவர் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். 

Daraz உண்மையில் ஒரு மதிப்புமிக்க நிறுவனம். நாங்கள் மன அழுத்தத்தையும் எங்களது வேலைப்பளுவையும் உணரவில்லை. Darazஉடன் பணிபுரிதல் அந்தளவுக்கு சுதந்திரமானது. அது உண்மையில் மதிப்புக்குரியது. 

இன்று, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நுகர்வோர் எங்களிடமிருந்து பொருட்களை வாங்குகிறார்கள். உண்மையில், Daraz மூலமே இதுபோன்ற வாய்ப்பு மற்றும் சுதந்திரம் எங்களுக்கு கிடைத்தது. அதனால்தான் Darazக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். 

ஆதரவுடனும் பலத்துடனும் Darazஐ கட்டியெழுப்பிய ஆயிரக்கணக்கான பிற தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் பலர் உள்ளனர். 

Darazஉடன் கைகோர்த்த வாடிக்கையாளர்களான நீங்களும் ஆயிரக்கணக்கானோரின் வெற்றிக்கதைகளில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்கள் ஆகின்றோம்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57