ஓட்ஸ் வெஜிடபிள் சூப்

Published By: Ponmalar

03 Feb, 2023 | 05:05 PM
image

தேவையானபொருட்கள்: 

ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி

கெரட் - சிறியது 1

பீன்ஸ் – 2

முட்டை கோஸ் - 25 கிராம்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 1(தேவைப்பட்டால்)

வெஜ் ஸ்டாக் பவுடர் - கால் தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்)

மிளகு தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

கெரட், பீன்ஸ், முட்டை கோஸ், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

சூப் செய்ய போகும் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் ஸ்டாக் பவுடர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

தண்ணீர் கொதி வந்ததும் கெரட், முட்டைகோஸ், பீன்ஸ் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும். 

இந்த காய்கறி கலவையில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும். 

சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் சூப் தயார். 

தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் தூவி சூடாக பரிமாறவும். 

அதிகம் காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம். எலுமிச்சைசாறும் அவரவர் ருசிகேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right