(நெவில் அன்தனி)
ஆசிய வலைபந்தாட்டத்தில் இராணிகளாக இலங்கை முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து தேசிய வலைபந்தாட்ட அணியை உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்கத்துடன் இலங்கையின் பிரதான தொடர்பாடல் இணைப்பாளரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் தேசிய வலைபந்தாட்டப் போட்டிக்கு 4ஆவது தொடர்ச்சியான தடவையாக அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
தேசிய வலைபந்தாட்ட சுற்றுப் போட்டி கொழும்பு, டொரிங்டன் மைதானத்தில் பெப்ரவரி 11, 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அரை இறுதிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பெப்ரவரி 13ஆம் திகதி நடைபெறும்.
இந்த வருட தேசிய வலைபந்தாட்டப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 35க்கும் மேற்பட்ட வலைபந்தாட்ட சங்க அணிகள் பங்குபற்றவுள்ளன.
சிரேஷ்ட தேசிய வீராங்கனைகளை தெரிவு செய்யும் களமாக இந்த வலைபந்தாட்டப் போட்டி அமைவதுடன், தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளதால் தேசிய வலைபந்தாட்டப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய வலைபந்தாட்டத்தின் பிரதான அனுசரணையாளர் என்ற வகையில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் தேசிய வலைபந்தாட்டப் போட்டியின் அரை இறுதிகள் மற்றும் இறுதி ஆட்டங்களை திபப்பரே.கொம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப முன்வந்துள்ளது. அத்துடன் டயலொக் ViU mobile App மற்றும் டயலொக் ரிவி அலைவரிசை 140 ஆகியவற்றில் பெப்ரவரி 13ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
'கடந்த சில வருடங்களில் எமது தேசிய அணி பன்மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். இந் நிலையில் எமது பெறுமதிமிக்க பங்களாராக டயலொக் ஆசிஆட்டா எம்மோடு இணைந்திருப்பதையிட்டு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்' என இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத் தலைவி விக்டோரியா லக்ஷ்மி தெரிவித்தார்.
'ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அத்துடன் நம்பிக்கையையும் வலுப்பெறச் செய்துள்ளது. எனவே இந்த உற்சாகமும் நம்பிக்கையும் இந்த வருடம் நடைபெறவுள்ள உலக வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பிலும் தொடரும் என நாங்கள் நம்புகிறோம்' என்றார் அவர்.
'திறமைகளைத் தேடும் உயர் மட்ட சுற்றுப் போட்டியை ஒழுங்குசெய்துள்ள இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்துடன் கைகோர்த்துள்ளதையிட்டு, இலங்கையில் ஆற்றல்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் பெரு நிறுவனம் என்ற வகையில் நாங்கள் பெருமை அடைகிறோம்' என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் குறியீடு மற்றும் ஊடக உதவித் தலைவர் ஹர்ஷா சமரநாயக்க தெரிவித்தார்.
'ஆசிய கிண்ணத்தை தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் இலங்கை வென்றெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் வழிநடத்திய இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தைப் பாராட்டுகிறேன்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த வருட சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான அனுசரணையை இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத் தலைவி விக்டோரியா லக்ஷமியிடம் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் குறியீடு மற்றும் ஊடக உதவித் தலைவர் ஹர்ஷா சமரநாயக்க வழங்கினார்.
கடந்த வருடம் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் விமானப்படை வலைபந்தாட்ட சங்க அணியை 49 - 47 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஹட்டன் நெஷனல் வங்கி சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM