எம்மில் பலரும் பலவித நோய்களுடன் உலா வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். 40 வயதைத் தொடும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக கொண்டு நலம் விசாரிக்கும் போது மறவாமல் சர்க்கரையின் அளவு, குருதி அழுத்தத்தின் அளவு பற்றி பரிமாறிக் கொள்ளாமல் இருப்பதில்லை. இந்நிலையில் இவர்கள் தினமும் ஓயில் புல்லிங் எளிய முறையிலான மருத்துவ சிகிச்சையொன்றை பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஓயில் புல்லிங் என்றால் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் முன் வாயில் 10 மி.லி. நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு 3 நிமிடங்களுக்கு வைத்துக் கொண்டு கொப்புளிக்க வேண்டும். இதன்மூலம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஒழிவதோடு அசிடிட்டி, சொத்தை போன்ற பிரச்னைகளும் வருவது தடுக்கபடும். அத்துடன் சருமமும் பளபளப்பாகும். ஓயில் புல்லிங் முடித்த பிறகு தவறாமல் நாக்கை வழிக்க வேண்டும். ஒரு சிலருக்கு இதன் போது நல்லெண்ணெயை மட்டும் தான் பயன்படுத்தவேண்டுமா? என கேட்பர். ஓலீவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். அதேபோல் 3 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு உமிழ்ந்து விடுகிறோம். உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது, மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்கலாம். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
எண்ணெய் கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்தவித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதேனும் நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் இதை மேற்கொள்ளலாம். ஒரு சிலருக்கு ஓயில் புல்லிங் செய்யும் போது, ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயை மாற்றுங்கள். ஒர்கானிக் எண்ணெயைத் தெரிவுசெய்யலாம். ஆனால் இப்பழக்கத்தை விட்டுவிடவேண்டாம். .
இதனை தொடர்வதன் மூலம், மூட்டு வலி, முழங்கல் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்கள் குறைந்து விடுவதாக பயனாளிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
டொக்டர் கே உமாபதி
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM