சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 5

03 Feb, 2023 | 01:30 PM
image

'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் 'பத்து தல' எனும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் :பத்து தல'.

இதில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டி ஜே அருணாச்சலம், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப் புயல்' ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். 

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'முஃப்தி' எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

'' அக்கரையில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்...'' எனும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஏ. ஆர். ரகுமான், பின்னணி பாடகர் யோகி சேகருடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த பாடலை அவரது ரசிகர்களும், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ரசிகர்களும் இணையத்தில் வைரலாக்கிக் கொண்டாடி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right