பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 5

03 Feb, 2023 | 01:31 PM
image

'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் அறுபதாவது திரைப்படமான  'வுல்ஃப்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ' வுல்ஃப்'. இதில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகள் நால்வர் இதில் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சந்தேஷ் நாகராஜ் தயாரித்திருக்கிறார். பிருந்தா ஜெயராம் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்குடன் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரபுதேவாவின் 60ஆவது திரைப்படம் என்பதாலும், தேசிய விருது பெற்ற கலைஞரின் தயாரிப்பு என்பதாலும், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right