தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை நிராகரிக்கிறார் அதானி

Published By: Sethu

03 Feb, 2023 | 11:12 AM
image

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக தான் உயர்ந்தமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரணம் எனக் கூறப்படுவதை கௌதம் அதானி நிராகரித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியில், இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனக் கூறியுள்ளார். பிரதமர் மோடியும் தானும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்ற விடயம், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு தன்னை ஒரு மென் இலக்காக்கியுள்ளது. எனது வெற்றிக்கு எந்தத் தலைவரும் காரணமில்லை" எனக் கூறியுள்ளார்.

கௌதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்கள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையையடுத்து, அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு  100 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற அஸ்தஸ்தையும் அதானி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17