வவுனியா - நீலியாமோட்டை, சின்னத்தம்பனை பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று காலை 9.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, நீலியாமோட்டை சின்னத்தம்பனை பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதனை அவதானித்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் விமானப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். 

இதன்போது, கைக்குண்டு ஒன்று, மோட்டார் குண்டு ஒன்று, மிதிவெடி 41 போன்ற வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.