OPPO A Series அணிவகுப்பின் புதிய தயாரிப்பான OPPO A17 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அறிமுகம்

Published By: Nanthini

03 Feb, 2023 | 10:59 AM
image

OPPOஉடன் அபான்ஸ் இணைந்து OPPO A Series அணிவகுப்பின் புதிய தயாரிப்பான OPPO A17 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை விற்பனை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி Courtyard by Marriott Colombo ஹோட்டலில் நடைபெற்றது. 

அதன்போது ;OPPOவின் இலங்கைக்கான தேசிய விநியோகஸ்தராக அபான்ஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். 

2015ஆம் ஆண்டு முன்னணி ஸ்மார்ட் சாதனமாக இலங்கை சந்தைகளில் அறிமுகமான OPPO ஸ்மார்ட் தயாரிப்புகள் அதிநவீன சிறப்பம்சங்கள் அடங்கிய தனித்துவமான உற்பத்திகளை தன்வசம் கொண்டுள்ளது. 

இலங்கை விற்பனை சந்தைகளில் நிலையான ஒரு விற்பனை நாமமாக OPPO தனது ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

Abans விநியோகிக்கும் புதிய A17 Series OPPO ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் 50MP பிரதான கெமரா, நீடித்துழைக்கும் பேட்டரி, ColorOS 12.1 Operating System ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 

Ultra-Slim Body மற்றும் faux Leather  நிறைவை கொண்டுள்ள புதிய OPPO A17 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியானது தட்டையான மற்றும் மென்மையான வளைவுடன், மெல்லிய வடிவமைப்பை கொண்டுள்ளதோடு, Lake Blue மற்றும் Midnight Black வர்ணங்களில் கிடைக்கிறது. 

சுமார் 8.29MM தடிமனான இதன் எடை தோராயமாக 189 கிராமாக இருப்பதால் கொண்டு செல்வது மிகவும் சுலபமாகும்.

OPPO A17 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் 50MP பிரதான கெமராவுடன் 5IP முன்புற கெமராவை கொண்டுள்ளதோடு, 360º Fill Light, Portrait Retouching, HDR உள்ளிட்ட புகைப்படங்களுக்கு மேம்படுத்தப்பட்ட பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. 

நீண்ட நேரம் நீடித்துழைக்கும் 5000mAh பேட்டரியுடன், Super Power Saving Mode & Super Nighttime Standby போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் பேட்டரியின் ஆயுள் நீடிக்கிறது. 

A17  மாதிரி MediaTek Helio G35 Mobile Platform மூலம் இயக்கப்படுவதோடு, இதிலுள்ள CPU2.3GHz  வரையான செயல்திறனுடன் இயங்குகிறது. மேலும், இதில் 4GB வரை இதன் RAM மற்றும் SD Card 1TB வரை விரிவுபடுத்த முடியும்.

OPPO A17 அணிவகுப்பின் OPPOஇன் ColorOS 12.1ஐ கொண்டுள்ள காரணத்தினால் Screenshot ஒன்றிலுள்ள Textஐ Google Lens மூலம் Three-Finger Translate ஊடாக 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதியுள்ளது. 

மேலும், பன்முக தேவைகளை ஒரே தடவையில் செய்துகொள்வதற்கு FlexDrop மற்றும் Five Grade Access Controlஉடன் பாதுகாப்பை உறுதி செய்யும் Photo Information Protection இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

OPPO A17 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி நாடளாவிய ரீதியில் Abans காட்சியறைகளில், BuyAbans.com மற்றும் அங்கீகாரம் கொண்ட விற்பனை முகவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.

OPPO விற்பனை நாமம் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து தற்போது வரை உலகளாவிய ரீதியில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னணி ஸ்மார்ட் சாதனங்களில் ஒன்றாக இயங்கிவருகிறது. 

OPPO ColorOS Operating System இயங்குதளத்தின் மூலம் ஸ்மார்ட் உற்பத்திகள் மற்றும் பல்வேறு மென்பொருள்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், உலகின் சிறந்த 5 ஸ்மார்ட்போன் ப்ராண்டுகளில் ஒன்றாக OPPO தனது ஆதிக்கத்தை சர்வதேச சந்தைகளில் வலுவாக நிலைநிறுத்தியுள்ளது. 

இது விளையாட்டு, கலை, வடிவமைப்பு, இசை, ஃபெஷன், பொழுதுபோக்கு மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற பல துறைசார் நிறுவனங்களோடு கூட்டிணைந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன் நவீன தொழில்நுட்பம் சார்ந்த முன்னணி உற்பத்தியாக உலகளவில் 30,000க்கும் அதிகமான காப்புரிமைகளை (பேடன்ட்) OPPO தன்வசம் கொண்டுள்ளது.

அபான்ஸ் குழுமத்தின் முதன்மை நிறுவனமான அபான்ஸ் PLC> 200க்கும் மேற்பட்ட ப்ராண்ட் போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ள முன்னணி வணிக வலையமைப்பாகும். 

மேலும், இது உலகின் பல முன்னணி இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பாவனை விற்பனை நாமங்களின் இலங்கைக்கான அங்கீகாரம் கொண்ட தனித்துவமான விற்பனை முகவராக திகழ்ந்து வருகிறது. 

நாடளாவிய ரீதியில் 440க்கும் அதிகமான காட்சியறைகளுடன் 15க்கும் அதிகமான விற்பனையின் பின்னரான சேவை நிலையங்களை இது நடைமுறைப்படுத்தி வருகிறது. 

இலத்திரனியல், வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள், வாகனங்கள், மின்சக்தி தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த உற்பத்திகள் மற்றும் பல்வேறு சேவைகளை வழங்கும் 30க்கும் மேற்பட்ட சுயாதீன நிறுவனங்களை அபான்ஸ் குழுமம் தன்வசம் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'சூர்யா'வுக்கான வர்த்தக நாமத் தூதுவராக இலங்கை...

2023-03-23 15:05:01
news-image

கடல் சுத்திகரிப்புத் திட்டத்தினூடாக தூய்மையான இலங்கையை...

2023-03-23 10:52:04
news-image

மக்கள் வங்கிக்கு சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள்...

2023-03-20 16:26:13
news-image

Daraz Express இனூடாக பெண் ஓட்டுநர்களின்...

2023-03-18 16:53:49
news-image

தனது நிலையான பயணத்தை தொடரும் அமானா...

2023-03-17 11:16:17
news-image

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையில்...

2023-03-15 17:19:59
news-image

மக்கள் வங்கியின் வனிதா வாசனா மூலமாக...

2023-03-07 11:16:52
news-image

கல்வி அமைச்சு மற்றும் Microsoft இணைந்து...

2023-03-07 11:46:52
news-image

வளர்ந்துவரும் இளம்தொழில் வல்லுநர்கள் நவீன மற்றும்...

2023-03-07 11:47:17
news-image

2022 ஆண்டிற்கான சிறந்த பெறுபேறுகளை பான்...

2023-02-28 11:36:32
news-image

சன்குயிக் ரெடி டு டிறிங்க் தொழிற்சாலையினை...

2023-02-27 14:34:37
news-image

"தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய்...

2023-02-27 11:28:32