(நா.தனுஜா)
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஆண்டு டிசம்பரில் 57.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம் இவ்வாண்டு ஜனவரி மாதம் 54.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி கடந்த டிசம்பரில் 64.4 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஜனவரியில் 60.1 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 53.4 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் ஜனவரி மாதம் 51 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த ஜனவரி மாதம் 0.43 சதவீதமாகக் காணப்படுவதுடன் இதற்கு உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் முறையே 0.23 சதவீதமாகவும், 0.20 சதவீதமாகவும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.
அதேவேளை ஆண்டுக்கான சராசரிப் பணவீக்கம் கடந்த ஆண்டு டிசம்பரில் 46.4 சதவீதத்திலிருந்து இவ்வாண்டு ஜனவரியில் 49.6 சதவீதமாக உயர்வடைந்தது.
இந்நிலையில் அண்மையகாலங்களில் பின்பற்றப்பட்டுவரும் இறுக்கமான நாணய மற்றும் இறைக்கொள்கையின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்கமானது இவ்வாண்டு முழுவதும் தொடருமென எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM