ஏறாவூர் பொலிஸ் பிரிவு சவுக்கடி கடலில் சடலொமொன்று கரையொதுங்கியது.
இச்சம்பவம் வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக இப்பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை மாலை பாலமீன்மடு கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுவிஸ் கிராமம் திராய்மடுவை சேர்ந்த இருதயம் அன்டனி 41வயதுடையவர் படகொன்றில் சென்று மறுநாள் (31) காலை கரையை நோக்கி வரும்போது பாரிய அலையொன்றினால் படகு கவிழ்ந்து காணாமல் போயிருந்தார்.
குறித்த விடயமாக கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக காணாமல்போன அன்டனி என்பவரை தேடிய உறவினர்களுக்கு ஏறாவூர் சவுக்கடி கடலில் சடலொமொன்று கரையொதுங்கியிருப்பதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது மனைவி 'சடலம் எனது கணவருடையது தான்' என அடையாளம் காட்டினார்.
மரண விசாரணைகளை முன்னெடுத்த மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை முடிவுற்றதும் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM