ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுசந்திகா மகளிர் கிரிக்கெட் ஆலோசகரானார்

Published By: Digital Desk 5

03 Feb, 2023 | 09:44 AM
image

(என்.வீ.ஏ.)

சிட்னி 2000 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கவை மகளிர் கிரிக்கெட் வழிகாட்டியாகவும் மேம்பாட்டு ஆலோசகராகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.

சமகால மற்றும் எதிர்கால மகளிர் கிரிக்கெட் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் தனது மன உறுதியையும் விளையாட்டுத்துறையில் தான் கொண்டிருந்த அர்ப்பணிப்புத் தன்மையையும் இலங்கையின் அதிசிறந்த முன்னாள் மெய்வல்லுநர் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க பகிர்ந்துகொள்வார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

இலங்கையில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட வீராங்கனைகளில் ஒருவரும், தேசத்திற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே ஒரு வீராங்கனையும், மகளிருக்கான குறுந்தூர ஓட்டப் போட்டியில் ஆசியாவிலேயே ஒலிம்பிக் பதக்கம் ஒரே ஒரு வீராங்கனையும் சுசந்திகா ஜயசிங்க ஆவார்.

இந்த நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட சுசந்திகா ஜயசிங்க, 'இந்த புதிய சவால் குறித்து நான் பூரிப்டைகின்றேன்.

ஏனெனில் இளம் பெண்களை  கிரிக்கெட்   விளையாட்டில் ஈடுபடுத்துவதற்கும் சவால்களை சமாளிப்பதற்கும் நான் உதவும் அதேவேளை அவர்களை எதிர்கால நட்சத்திரங்களாக பிரகாசிக்கச் செய்வேன்' எனக் குறிப்பிட்டார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் சுசந்திகா ஜயசிங்க பெறுமதிமிக்கவராக திகழ்வார் என்பதை மனதில் கொண்டு அவரை வரவேற்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.  

பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சுசந்திகாவை மகளிர் கிரிக்கெட் மேம்பாட்டு ஆலோசகராக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28
news-image

மரித்துப்போன கால்பந்தாட்டத்திற்கு உயிர் கொடுக்க நண்பர்களாக...

2023-03-20 20:53:51
news-image

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா...

2023-03-20 15:14:33