ஹொங்கொங்கிற்கு வருபவர்களுக்காக 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகள்: ஹொங் கொங் தலைவர் அறிவிப்பு

Published By: Sethu

02 Feb, 2023 | 08:59 PM
image

ஹொங் கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.

சீனாவின் தென்பகுதி, பிராந்தியமான ஹொங்கொங், வர்த்தகம் மற்றும் உல்லாசப் பயணத்துறைக்கு பிரசித்தி பெற்றதாகும்.

3 வருடகால கொவிட்-19 தனிமைப்படுத்தல், அரசியல் அடக்குமுறைகள் ஆகியவற்றின் பின்னர், மீண்டும் ஹொங் கொங்கை உலகை வரவேற்கும் 'ஹெலோ ஹொங்கொங்' பிரச்சார நடவடிக்கைகளை ஹொங்கொங் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

ஹொங்கொங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் லீ இது தொடர்பாக, இன்று உரையாற்றுகையில், ஹொங்கொங்குக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டா எனத் தெரிவித்துள்ளார். அத்துடன். ஹொங் ஹொங்குக்கு வருபவர்களுக்கு 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார். 

இந்த இலவச விமானப் பயணச்சீட்டுத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஹொங் கொங் விமான சேவை நிறுவனங்களனெ கெதே பசிபிக், எச்கே எக்ஸ்பிரஸ், ஹொங் கொங் எயார்லைன்ஸ் ஆகியவற்றுக்கு ஊடாக இந்த டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஹொங் கொங்கில் வசிப்பவர்களுக்ககா மேலும் 80,000 இலவச விமானப் பயண டிக்கெட்டுகளும் வழங்கப்படவுள்ளன. அவை எந்த இடங்களுக்கு வழங்கப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது:...

2023-03-23 15:36:05
news-image

தாய்லாந்தில் ஆஸி தூதரக பெண்கள் கழிவறையில்...

2023-03-23 14:24:40
news-image

தென் சீனக் கடலிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலை...

2023-03-23 13:36:05
news-image

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2...

2023-03-23 12:37:28
news-image

மோடி என்ற பெயர் பற்றி அவதூறு...

2023-03-23 11:45:38
news-image

கனேடிய சனத்தொகை ஒரு வருடத்தில் முதல்...

2023-03-23 11:42:05
news-image

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பொது இடங்களில்...

2023-03-23 11:25:14
news-image

உக்ரைன் போலந்து எல்லைக்கு இளவரசர் வில்லியம்...

2023-03-23 09:58:40
news-image

3D அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட முதல்...

2023-03-23 10:46:39
news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01