கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் ஹெட்காலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 19 , 20 வயதுகளுடைய இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக ஹெட்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது உடுநுவர வெலம்பொட பாடசாலை ஒழுக்கையைச் சேர்ந்த மொஹமட் சித்தீக் மொஹமட் சபீக் 19 வயது மற்றும் லியங்காவத்தையைச் சேர்ந்த மொஹமட் கபூர் மொஹமட் ஹர்ஷாட் 20 வயது இளைஞர்களே பலியாகியுள்ளனர்.
நேற்று (01) இரவு இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேற்குறிப்பிட்ட இரு இளைஞர்களின் ஒருவரது தந்தைக்கு சொந்தமான நாவலப்பிட்டியில் அமைந்துள்ள தேயிலைத்தொழிற்சாலைக்கு சென்றுவிட்டு மீண்டும் தமது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் எதிரேசென்ற வாகனத்தினை முந்திச் செல்ல முற்பட்ட சமயம் கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த காரில் மோதி விபத்து சம்பவித்துள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரித்தனர்.
காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேற்படி சம்பவம் குறித்த விசாரணைகளை ஹெட்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM