உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய, மலேசிய சிறு குறுந்தொழில் மாநாடு - B2B Meet

Published By: Nanthini

02 Feb, 2023 | 04:28 PM
image

லகத் தமிழ் வர்த்தக சங்கம் எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்திய அரசு மற்றும் மலேசிய அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகத்தின் அனுசரணையுடன் பன்னாட்டு சிறு குறுந்தொழில் மாநாடு (International MSME B2B Meet) மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும், பேரா மாநிலத்திலும் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் இந்தியாவில் உள்ள பல்வேறு வர்த்தக சங்கங்கள், 250க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மலேசியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். 

மேலும், மலேசியாவில் உள்ள பல்வேறு மாநில இந்திய வர்த்தக சங்கங்கள், உணவக உரிமையாளர் சங்கங்கள், சிறு தானிய இறக்குமதியாளர்கள், ஆடை உற்பத்தி ஏற்றுமதி - இறக்குமதியாளர்கள், இந்திய பாரம்பரிய மருத்துவ வகைகளான சித்தா, ஆயுர்வேதா மருந்து வகைகளை இறக்குமதி செய்பவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த சங்கங்கள் ஏற்றுமதி - இறக்குமதி தொழில் முனைவோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மலேசிய உலக பெருந்தொழில் ஏற்றுமதியில் 40%, இறக்குமதியில் 33% உள்ள இரு நாட்டு வர்த்தகத்தில் சிறு மற்றும் குறுந்தொழிலில் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்நிகழ்வை உலகத் தமிழ் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 

மேலும், மலேசியாவில் முதன்முதலில் தமிழ் பெண் அமைச்சராக பதவியேற்றுள்ள சரஸ்வதி கந்தசாமி, சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சராக பதவியேற்றுள்ள இவ்வேளையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மலேசிய பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வர் இந்தியாவுடன் நட்பு பாராட்டி, வர்த்தகத்தை மேன்மையடையச் செய்யும் நோக்கத்தில் செயற்படுவதால் சிறு மற்றும் குறுந்தொழில் அடுத்தகட்ட பொருளாதார நகர்வுக்கு எடுத்துச் செல்லவுள்ளது.

இந்நிகழ்வை பற்றி அறிந்த பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் தொழிலதிபர்கள், தொழில் வாய்ப்புகளை தேடுவோர் மலேசியாவில் நடைபெறும் பன்னாட்டு சிறு குறுந்தொழில் B2B மாநாட்டில் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளனர் என உலகத் தமிழ் வர்த்தக சங்க தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான செல்வக்குமார் தெரிவித்தார். 

அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் +60166167708 எனும் வட்ஸ்அப் இலக்கம் மற்றும் msmeb2bmeet@gmail.com என்கிற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35