அதானி குழும விவகாரம் | நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை

Published By: Rajeeban

02 Feb, 2023 | 04:13 PM
image

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பர்வையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

நாடாளுமன்றம் இன்று(வியாழக்கிழமை) கூடியதும், அதானி குழுமம் மீதான குற்றாச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

இந்திநிலையில் இந்த விவாகரம் குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர், அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "சந்தை மதிப்பை இழந்துள்ள அதானி குழும நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்களின் முதலீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் விதி எண் 267ன் கீழ் வணிக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாகாரம் குறித்து விவாதம் நடத்த நாங்கள் விரும்பினோம். ஆனால், எங்களுடைய நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எப்போதெல்லாம் முக்கியமான விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதிக்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற தேசிய வங்கிகளில் ஏழைகளின் பணமும் உள்ளது. அந்த பணம் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அந்த முதலீடுகள் இழப்பைச் சந்திக்கும்போது அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இந்த விவாகாரம் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வைாயிலான குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17
news-image

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் அமெரிக்கா,...

2023-03-24 10:37:34
news-image

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..' -...

2023-03-24 10:10:17
news-image

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது:...

2023-03-23 15:36:05