பரீட்சை மண்டபத்தில் 500 மாணவிகளுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்டதால் மயங்கி வீழ்ந்த மாணவன்

Published By: Sethu

02 Feb, 2023 | 03:39 PM
image

பரீட்சை எழுதுவதற்காக சென்ற ஒரு மாணவன், 500 மாணவிகளைக் கொண்ட பரீட்சை மண்டபத்தில் தனி ஆணாக தான் இருப்பதை உணர்ந்ததல், மயங்கிவீழ்ந்த சம்பவம் இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. 

பீஹார் மாநிலத்தின் தனியார் பாடசாலையொன்றைச் சேர்ந்த இம்மாணவன், 12 ஆம் வகுப்பு பரீட்சை எழுதுவதற்காக, பிரில்லியன்ட் ஸ்கூல் எனும் பாடசாலைக்குச் சென்றிருந்தான்.

பரீட்சை மண்டபத்தில் சுமார் 500 மாணவிகளுக்கு மத்தியில் தான் மாத்திரமே மாணவனாக இருப்பதை உணர்ந்தவுடன் அவன் மயங்கிவீழ்ந்தான். 

அம்மாணவனுக்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் அவன் மயங்கிவீழ்ந்தான். 

இம்மாணவனின் உறவினர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில்,  பரீட்சை மண்டபம் முழுவதும் மாணவிகாக இருப்பதைக கண்டவுடன்  அம்மாணவனுக்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் காய்ச்சல் ஏற்பட்டு, அவன் மயங்கவிட்டான் என ஏஎன்ஐ செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார். 

இம்மாணவன் சதார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அம்மாணவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்