(க.கிஷாந்தன்)

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருள் கொண்டு செல்வதை தடுக்கும் நோக்குடன் விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த திட்டமானது நேற்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை சந்தியில் உள்ள காவலரணில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, 40 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் விசாணையின் பின் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களில் ஒரு சிலர் போதைப்பொருள்களை சிவனொளிபாத மலைக்கு கொண்டு செல்வதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த மொப்பநாய்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையில் ஹட்டன் பொலிஸாரும், மஸ்கெலியா பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.