SLIM Brand Excellence Awards 2022இல் பாராட்டை பெற்றது Diva Power 

Published By: Nanthini

02 Feb, 2023 | 03:16 PM
image

ண்மையில் இடம்பெற்ற SLIM Brand Excellence Awards 2022இல், முன்னணி வீட்டுப்பாவனை சலவை வர்த்தக நாமமான Diva, இவ்வருடத்தின் சிறந்த புதிய வரவு சின்னத்துக்கான வெண்கல விருதை தட்டிச் சென்றது. 

இலங்கையில் உள்ள பிரபல வர்த்தக நாமங்களின் வலுவான போட்டிக்கு மத்தியில் Diva Power இந்த விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020இல் ஆரம்பிக்கப்பட்ட Diva Power வர்த்தக நாமத்தினால், நாட்டின் சலவைத்துறையில் மிக விரைவாக புரட்சியை ஏற்படுத்தவும் இலங்கையர்களின் இதயங்களை வெல்லவும் முடிந்துள்ளது. 

Diva Power கட்டுப்படியாகும் விலையிலான சலவைத் தயாரிப்பாக இருக்கும் அதேவேளையில், ஆடைகளுக்கு பாதுகாப்பு மற்றும் சிறந்த சுத்தத்தை வழங்குவதில் புகழ் பெற்றுள்ளது. 

கிருமிகளிலிருந்து 99.9% பாதுகாப்பை வழங்கும் Diva Power Germ Guard மற்றும் நிறம் மங்குவதை தடுப்பதன் மூலம் ஆடைகளை பாதுகாக்கும் Diva Power Colour Guard ஆகிய இரண்டு வகைகளில் Diva Power கிடைக்கிறது.

இவ்விருது வென்றமை தொடர்பில் Hemas Consumer Brands நிறுவனத்தின் வீட்டுப் பராமரிப்பு பிரிவின் தலைவி திருமதி. அனுஷ்கா சபாநாயகம் கருத்து தெரிவிக்கையில், 

“அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே வருடங்களில் Diva Power அதன் முன்னேற்றத்தை பறைசாற்றும் இந்த அங்கீகாரம் தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். 

சந்தையில் ஓர் இளம் வர்த்தக நாமமாக இருப்பதனால், மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள வர்த்தக நாமங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளமையானது ஒரு பெரிய சாதனையாகும். 

இவ்விருதானது Diva வர்த்தக நாமத்தையும், அந்த வர்த்தக நாமத்துடன் கூடிய விசுவாசமான நுகர்வோருக்கும் உயர்தர சலவை தீர்வுகளை வழங்குவதற்கான அதன் முயற்சிகளையும் மேலும் வலுவடையச் செய்கிறது" என்றார்.

Diva, அனைத்து சமூகப் பிரிவைச் சேர்ந்த இலங்கையர்களால் விரும்பப்படும் ஒரு வீட்டுப் பாவனை வர்த்தக நாமமாகும். அத்துடன் இந்த வர்த்தக நாமத்தை சூழ்ந்திருக்கும் விசுவாசமான நுகர்வோர் தளமானது, இவ்வர்த்தக நாமம் சிறந்த சலவைத் தயாரிப்புகளை வழங்குவதில் கொண்டுள்ள அதன் அக்கறைக்கு ஓர் உண்மையான சான்றாகும். 

கடந்த சில காலத்துக்குள் Diva வர்த்தக நாமமானது, சலவைத்துறையில் ஒரு முக்கிய வீரனாக மாறி வந்துள்ளதோடு, இத்தொழில்துறையில் உள்ள ஜாம்பவான்களுடன் அது போட்டியிட்டு வருகிறது. 

Diva Power தூள், திரவம், Diva சவர்க்காரம், Diva Fresh சலவைத்தூள் ஆகியவற்றை உள்ளடக்கிய தயாரிப்பு வகைகளால் Diva பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அவை வெவ்வேறு வகைகளிலும் மாறுபட்ட பொதி அளவுகளிலும் கிடைக்கின்றன.

உச்ச வகையில் நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தக நாமம் எனும் வகையில், Diva தனது பயணத்தின் ஓர் அங்கமாக உள்ள அதன் விசுவாசமான நுகர்வோர் தளத்துக்கும், வர்த்தக நாமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள அபரிமிதமான நம்பிக்கைக்கும் Diva தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

Hemas Consumer பற்றி...

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத்துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumerஆனது, Hemas Holdings PLCஇன் துணை நிறுவனமாகும்.

1948இல் நிறுவப்பட்ட Hemas, குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவுதல் எனும் ஓர் எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 

இன்று 4,500க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட முன்னணி மக்கள் மைய நிறுவனமாக உள்ள இது, நுகர்வோர், சுகாதார மற்றும் பல்துறை அம்சங்களில், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தனித்துவ துறை மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கி வருகிறது. 

Hemas நிறுவனம், அதன் தொடர்ச்சியான பயணத்தில், தொடர்ந்தும் மாறுபட்ட மற்றும் முக்கிய விடயங்களில் முதலீடு செய்வதோடு, அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து வருவதோடு, அதன் மூலம் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வெற்றிகொள்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57