இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 5

02 Feb, 2023 | 03:42 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌட்யால் நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின்பேரில் நாட்டிற்கு வருகைதரவுள்ள நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌட்யால், சனிக்கிழமை (04) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்வார்.

அதுமாத்திரமன்றி நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ள அவர், வெள்ளிக்கிழமை (03) ஜனாதிபதி செயலகத்தினால் சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'லங்கார லங்கா' என்ற கலாசார நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ள பிமலா ராய் பௌட்யால், ஜனாதிபதியின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உபசார நிகழ்விலும் பங்கேற்பதோடு ஞாயிறன்று மீண்டும் நேபாளம் திரும்புவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம்...

2024-05-29 10:24:11
news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19
news-image

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்...

2024-05-29 09:19:38
news-image

இன்றைய வானிலை

2024-05-29 06:14:11
news-image

ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடும்...

2024-05-29 05:45:55
news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28