(எம்.மனோசித்ரா)
சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய வெள்ளிக்கிழமை (3) பகல் 2 மணிமுதல் 4 ஆம் திகதி சனிக்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை காலி வீதி, சாரணர் வீதி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்று வட்டம் வரையான வீதி மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை (4) முற்பகல் 10 மணிவரை பம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து கொள்ளுப்பிட்டி சந்திவரை கடற்கரை வீதியும் மூடப்பட்டிருக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வீதிகள் மூடப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் தமது அன்றாட தேவைகளுக்காக செல்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்தவுடன் வீதிகள் திறக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM