சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் நாட்டு மக்களில்லை - நாலக கொடஹேவா

Published By: Vishnu

02 Feb, 2023 | 03:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேசத்திடம் யாசகம் பெற்று சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டுமா? சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் நாட்டு மக்கள் இல்லை, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் வியாழக்கிழமை (பெப் 2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தின் வரி சீர்த்திருத்த கொள்கையினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மாதம் ஒரு இலட்சம் சம்பளம் பெறும் அந்த சம்பளத்தின் ஊடாக வீட்டுக் கடன்,வாகன கடன் ஆகியவற்றை சமாளித்து வந்த நிலையில் அரசாங்கம் ஒரே கட்டமாக வரி கொள்கையை அமுல்படுத்தியுள்ளதால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உயர் சம்பளம் பெறும் துறைசார் நிபுணர்களுக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி காணப்படும் நிலையில் அவர்கள் நாட்டுக்காக சேவையாற்றினார்கள்.அரசாங்கத்தின் முறையற்ற வரி கொள்கையினால் துறைசார் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவது பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்துமே தவிர மேம்படுத்தாது.

குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான நிபந்தனையாக உள்ளது.அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு கடுமையான முறையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியதை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 200 மில்லியன் ரூபா சர்வதேசத்திடம் யாசகம் பெற்று சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமா, சுதந்திர தினத்தை கௌரமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் அக்கிராசன உரையாற்ற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்.பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் 50 இற்கும் அதிகமான பாராளுமன்ற குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற குழுக்களை மீண்டும் நியமிக்க வேண்டுமாயின் பாரிய நிதி செலவாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச செலவுகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை மாறாக பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து பாராளுமன்ற செலவுகளை பல மடங்கு பெருப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவருடகாலத்துக்கு நீடியுங்கள் ; ஐ.நா மனித...

2025-01-18 22:05:07
news-image

சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வின் மூலமே தமிழர்களின்...

2025-01-18 22:11:09
news-image

ராஜபக்ஷக்கள் நாட்டை சீன கடன்பொறிக்குள் தள்ளவில்லை...

2025-01-18 21:56:39
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை ஏதேனுமொரு பரிமாணத்தில்...

2025-01-18 21:52:14
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக...

2025-01-18 15:54:49
news-image

இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் நிபந்தனையற்ற நண்பனாக...

2025-01-18 18:19:10
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -...

2025-01-18 21:51:31
news-image

நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்; பொதுமக்கள்...

2025-01-18 17:06:52
news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23